search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    ராமர் கோவில் பூமி பூஜையில் அவர் கலந்து கொண்டதாக வைரலாகும் சர்ச்சை புகைப்படம்

    ராமர் கோவில் பூமி பூஜையில் அவர் கலந்து கொண்டார் என கூறி சர்ச்சை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1989 ஆண்டு நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்த கொண்டதாக கூறும் கருப்பு வெள்ளை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வைரல் பதிவுகள், 'நவம்பர் 9, 1989 ஆண்டு நடைபெற்ற பூமி பூஜை கார்த்திகை மாதத்தில் ஏகாதசி தினத்தில் நடைபெற்றது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் சடங்குகளை செய்ய குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்திருந்தது. அப்போதைய பூசாரிகள் இந்த காலத்தவர்கள் போன்று இல்லை' என கூறும் தலைப்புகளில் வைரலாகி வருகின்றன.  

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    தற்சமயம் வைரலாகும் புகைப்படம் எந்த பூமி பூஜைக்கும் தொடர்புடையது அல்ல. மாறாக இந்த புகைப்படம் புது டெல்லியை சேர்ந்த இஸ்கான் சோவியத் ஹரே கிராஷ்னாக்கள் பகவத் கீதையின் ரஷ்ய மொழி பதிப்பினை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வழங்கிய போது எடுக்கப்பட்டது ஆகும். 

    இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் வைரல் புகைப்படம் ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகி விட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×