search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ் காந்தி"

    • மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

    இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
    • ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை (மே 21-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது. ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.

    • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • இதில் பங்கேற்க ராகுல் காந்தி வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

    • ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் வழங்கினார்
    • ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்கள் வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    ராகுல்காந்தி பாதயாத்திரையின் போது சுங்கான்கடை எல்லை பகுதியில் ராகுல்காந்திக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமையில் துணை தலைவர்கள், வட்டார தலைவர்கள், கிராம ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு ராகுல் காந்தி மாலை அணிவித்தார். மேலும் ஒற்றமை பயணத்தை வெற்றி பெற செய்யும் வகையில் 4 புறாக்களை அஜிகுமார் வழங்கினார்.

    அதனை பெற்று கொண்ட ராகுல் காந்தி அந்த புறாக்களை வானில் பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் 2½ அடி உயரமுள்ள தேக்கு மரத்தாலான ராஜீவ் காந்தி உருவ சிலையை ராகுல் காந்தியிடம் அஜிகுமார் வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு வீரபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • ராபர்ட் வத்ரா, எம்பி கேசி வேணுகோபால், லோபி மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு வீரபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இவர்களைத் தவிர, ராபர்ட் வத்ரா, எம்பி கேசி வேணுகோபால், லோபி மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார்.
    • இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார்.

    1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், " அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது மரியாதை" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Perarivalan #RajivGandhiCase
    புதுடெல்லி :

    ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

    அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில், மத்திய அரசும், தமிழக அரசும் அரசியல் செய்து வருகின்றன. அந்த பயங்கரவாதிகள், ராஜீவ் மட்டுமின்றி, அப்பாவி மக்களும், போலீசாரும் கொல்லப்பட காரணமானவர்கள். சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்கள்.

    இதுவரை அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. போலி தேசியவாதத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள், இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருகிறார்கள். மத்திய அரசும், அ.தி.மு.க. அரசும் பயங்கரவாதம் விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. இத்தகைய செயல்கள் மூலம் பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகின்றன. எனவே, பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் உண்மையின் கண்ணாடியை காண்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

    பரந்த இதயம் கொண்ட அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருடைய சகோதரி பிரியங்கா ஆகியோர் ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ்காரனாகவும் நாங்கள் எளிமையான ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு மாநில அரசின் கடமை, பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதா? பாதுகாப்பதா?

    அவர்களை விடுவிக்க பா.ஜனதா நியமித்த கவர்னருக்கு பா.ஜனதாவின் கூட்டாளியான அ.தி.மு.க. பரிந்துரை செய்துள்ளது. இதுதான் தற்போது மாநில அரசின் கொள்கையா? அவர்களை விடுவிக்கப்போகிறார்களா? பயங்கரவாதிகளை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு. இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார். #Perarivalan #RajivGandhiCase
    ×