என் மலர்
இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள்- நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
- ராஜீவ்காந்தியின் 80-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- இந்தியாவுக்கான உங்களது கனவை நிறைவேற்றுவேன்.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது மகனும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். கொட்டும் மழையில் அவர் நடந்து சென்று மரியாதை செலுத்தினார்.
இந்த புகைப்படத்தை அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் அப்பா ராஜீவ் இந்தியாவுக்கான உங்களது கனவை நிறைவேற்றுவேன், உங்கள் கனவுகள், எங்கள் கனவுகள். உங்கள் போதனைகள் உத்வேகம் அளிக்கிறது.
உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொள்வேன். இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம், நல்லெண்ணத்தின் சின்னம் ராஜீவ் என்று கூறி உள்ளார்.
Next Story






