search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த  இளம் தலைவர் ராகுல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல்"

    • வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு சற்று பின்னடைவு இருப்பதாக தகவல்.
    • 6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் வடமாநிலங்களில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் வைத்திருந்த உறவை தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. முறித்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

    மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வின் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து பேசியது அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

    இன்று ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் ராகுல்காந்தியின் வீடியோவை பதிவேற்றம் செய்து, அவர் குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் நான் பார்த்து, நெகிழ்ந்து, ரசித்த இளம் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி மக்களுடன் மக்களாக சகஜமாக உரையாடுகிறார்.



    Next Story
    ×