என் மலர்tooltip icon

    இந்தியா

    அன்புள்ள அப்பா - ராஜீவ் நினைவு நாளில் ராகுல் நெகிழ்ச்சி
    X

    'அன்புள்ள அப்பா' - ராஜீவ் நினைவு நாளில் ராகுல் நெகிழ்ச்சி

    • ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
    • நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார்.

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்தச் சூழலில் தனது தந்தை ராஜீவ்காந்தியுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். மேலும் "அப்பா உங்களது கனவுகள், எனது கனவுகள், உங்களின் ஆசைகள், எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள் இன்றும், என்றும் எனது நெஞ்சில் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.



    Next Story
    ×