search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கொரோனா - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    தலைநகர் டெல்லியில் சராசரியாக 4 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநில வைரஸ் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்க்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இதற்கிடையில், மக்கள் தொகை அதிகம் கொண்ட தலைநகர் டெல்லியில் நாள்தோறும் வைரஸ் உறுதி செய்யப்படுவர்களி எண்ணிக்கை சராசரியாக 1,000 என்ற அளவிலேயே உள்ளது.

    டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று 1,227 புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்க 1 லட்சத்து 26 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது. 

    வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 650 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 
    இதுவரை 3 ஆயிரத்து 719 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் உண்மையான எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஒட்டுமொத்த டெல்லியில் கால் சதவிகிதம் பேருக்கு கொரோனா இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதாவது டெல்லி வசிக்கும் மக்களில் சராசரியாக 4 பேரில் ஒருவருக்கு கொரோனா உள்ளது. 

    இது தொடர்பாக தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் டெல்லி மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 21 ஆயிரத்து 387 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

    அதில் 23.48 சதவிதம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது டெல்லியில் சராசரியாக நான்கு பேரில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

    கோப்பு படம்

    தலைநகரில் உள்ள மக்கள் தொகையை இந்த ஆய்வின் அடிப்படையில் ஒப்பிடும் பட்சத்தில் 46 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவருகிறது.

    டெல்லியில் உள்ள மக்களில் 77 சதவிகிதம் பேருக்கு உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இல்லை எனவும், அவர்கள் அனைவருக்கும் கொரோனா சுலபமாக பரவிவிடலாம் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கொரோனா பரவலை தடுக்க இடத்தை தூய்மையாக வைக்க வேண்டும். சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள அனைவரும் எல்லா நேரமும் முக்கவசம் அணிந்து சானிடைசரை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு செய்தால் மட்டுமே டெல்லியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்ளப்படுவதால் வைரஸ் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், பரிசோதனையை அதிகரித்தால் நிச்சயம் அதிக நபருகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகும் எனவும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×