search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அதிகரிக்கும் கொரோனா: பெங்களூரு முழுவதும் 14-ம் தேதி முதல் முழு ஊரடங்கு

    கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் பெங்களூரு ரூரல் மற்றும் பெங்களூரு அர்பன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் வரும் 14 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன.

    இதற்கிடையில் இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது பெங்களூருவிலும் வேகமாக பரவி வருகிறது.

    பெங்களூரில் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த கொரோனா தற்போது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 798 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 1,535 பேர் பெங்களூரில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள்.

    இதனால் கர்நாடகாவில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு நகரில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14 ஆம் தேதி முதல் நகரம் முழுவதும்
    முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

    கோப்பு படம்

    இது குறித்து கர்நாடக மாநில முதல்மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 

    பெங்களூரு ரூரல் மற்றும் பெங்களூரு அர்பன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் வரும் 14 (ஜூலை) ஆம் தேதி இரவு 8 மணி முதல் 22 (ஜூலை) ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 

    பெங்களூரு நகரில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவை தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  
         
    Next Story
    ×