என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சரியாக இதை செய்தால் போதும் என கூறும் வாட்ஸ்அப் ஆடியோ
Byமாலை மலர்10 July 2020 4:05 AM GMT (Updated: 10 July 2020 4:05 AM GMT)
வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் ஆடியோ பதிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாக இதை செய்தாலே போதும் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் வைரலாகும் ஆடியோ ஒன்றில் ஆவி பிடித்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிவிடும் என கூறப்படுகிறது. ஆடியோ குரலில் பேசுவது மும்பையை சேர்ந்த மருத்துவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
வைரல் பதிவுகளின் பின்னணியை ஆய்வு செய்ததில் ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிவிடும் என இதுவரை அறிவில் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
உண்மையில் ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கடைப்பு மட்டும் சரியாகும், ஆனால் உடலில் உள்ள வைரஸ் எதுவும் அழிக்கப்படாது என நுரையீரல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாட்ஸ்அப் வைரல் ஆடியோவில் மும்பை பகுதியில் கூப்பர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் போன்சேல் மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசுவது தெளிவாக கேட்கிறது. வைரல் ஆடியோ பற்றி போன்சேல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அந்த வகையில் வைரல் ஆடியோவில் உள்ளது போன்று ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகும் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×