search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    இன்று நடக்க இருந்த அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீர் ரத்து: எடியூரப்பா

    இன்று(வெள்ளிக்கிழமை) கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடக்கவிருந்த அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறித்துள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் கொரோனா தாண்டவமாட தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரத்தை தாண்டி பாதித்தோர் எண்ணிக்கை பதிவாகி வருவதால் நகரவாசிகள் பீதியடைந்துள்ளனர். நகரில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் ஆலோசனை கூட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் கூட்டியிருந்தார்.

    ஆனால் திடீரென மாலையில், இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க 7 மந்திரிகள் உள்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அந்தந்த மண்டலங்களில் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
    Next Story
    ×