என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் ஒரேநாளில் 1,498 பேருக்கு கொரோனா: பெங்களூருவில் 800 பேருக்கு பாதிப்பு
Byமாலை மலர்8 July 2020 9:20 AM IST (Updated: 8 July 2020 9:20 AM IST)
கர்நாடகத்தில் ஒரேநாளில் 1,498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு 15 பேர் பலியாகியுள்ளனர். பெங்களூருவில் மட்டும் ஒரேநாளில் 800 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் 1800, 1900-ஐ தாண்டி பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று சற்று குறைந்து வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 1,498 ஆக பதிவானது. பெங்களூருவில் சில நாட்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில் சற்று குறைந்து 800 ஆக பதிவாகி இருக்கிறது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ளனர். நேற்று பெங்களூருவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பெங்களூரு வாசிகளுக்கு சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,498 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 11 ஆயிரத்து 98 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 571 பேர் அடங்குர்.
புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 800 பேர், தட்சிண கன்னடாவில் 83 பேர், தார்வாரில் 57 பேர், கலபுரகியில் 51 பேர், பீதரில் 51 பேர், மைசூருவில் 59 பேர், பல்லாரியில் 45 பேர், ராமநகரில் 37 பேர், உத்தரகன்னடாவில் 35 பேர், சிவமொக்காவில் 33 பேர், மண்டியாவில் 29 பேர், உடுப்பியில் 28 பேர், ஹாசனில் 26 பேர், பாகல்கோட்டையில் 26 பேர், ராய்ச்சூரில் 23 பேர், விஜயாப்புராவில் 22 பேர், பெலகாவியில் 20 பேர், துமகூருவில் 16 பேர், குடகில் 14 பேர், யாதகிரியில் 10 பேர், தாவணகெரே, கோலார், ஹாவேரி, சாம்ராஜ்நகர், சிக்கமகளூருவில் தலா 6 பேர், கொப்பலில் 5 பேர், கதக்கில் 4 பேர், சிக்பள்ளாப்பூரில் 3 பேர், சித்ரதுர்காவில் ஒருவர் உள்ளனர்.
கொரோனாவுக்கு நேற்று 15 பேர் பலியாகினர். இதில் பாகல்கோட்டையை சேர்ந்த ஒருவர், மைசூருவை சேர்ந்த 4 பேர், ஹாசனை சேர்ந்த ஒருவர், தார்வாரை சேர்ந்த ஒருவர், பெலகாவியை சேர்ந்த ஒருவர், தாவணகெரேயை சேர்ந்த ஒருவர், கலபுரகியை சேர்ந்த 2 பேர், பீதரை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் தற்போது 15 ஆயிரத்து 297 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 40 ஆயிரத்து 47 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 17 ஆயிரத்து 742 மாதிரிகள் அடங்கும். 66 ஆயிரத்து 795 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story
×