search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    இந்திய வான்படையின் மாஸ் நடவடிக்கை என வைரலாகும் வீடியோ

    இந்திய வான்படை மாஸ் நடவடிக்கை என கூறும் தகவலுடன் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து லே விமான தளத்தில் இந்திய வான்படை அபாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் மிக் 29 ரக ஜெட் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருக்கிறது. 

    இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர்கள் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஏரியின் மேல்பரப்பில் பறந்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
    வைரல் பதிவுகளில் வீடியோவில் உள்ள ஹெலிகாப்டர்கள் இந்திய வான்படைக்கு சொந்தமான அபாச்சி ரக மாடல்கள் என்றும் இவை லடாக்கில் உள்ள பாங்காங் சோ பகுதியில் ரோந்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அதில் உள்ள ஹெலிகாப்டர்கள் இந்திய வான்படைக்கு சொந்தமானவை இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் அவை பறக்கும் இடம் பாங்காங் சோ பகுதியும் இல்லை. இவை அமெரிக்காவின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஆகும். இவை அரிசோனா மாகாணத்தின் ஹவாசு ஏரியின் மேல் பறந்து கொண்டிருக்கின்றன. 

    இந்த வீடியோ 2018 யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் வைரல் வீடியோவுக்கும் இந்திய வான்படைக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×