search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arizona"

    • குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் படகை இயக்கினார்
    • 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரமாக தொடர்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அரிதான ஒரு விபத்தில், ஒரு தாயின் கவனக்குறைவால் அவரின் 6-வயது மகள் பலியானார். மரிகோபா கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தின் அறிக்கையின்படி இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் ஏரியில் நடந்தது.

    அந்த ஏரியில் ஒரு படகில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பொழுதுபோக்கிற்காக சென்றனர். ஏரிப்பகுதியில் அந்த படகு நிறுத்தப்பட்டது. அவர்களின் ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி, அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதியில் நீந்தி விளையாடி கொண்டிருந்தார்.

    படகின் பின்புறம் தனது குழந்தை நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அச்சிறுமியின் தாய் அந்த படகை இயக்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக படகு இயக்கக்கூடிய இயந்திரத்தின் இறக்கையில் சிக்கி சிறுமியின் கால் துண்டானது.

    நீந்தி கொண்டிருந்த அச்சிறுமியின் தந்தை படகின் அருகே நீரில் யாரோ தவிப்பதை அறிந்து வேகமாக அருகே வந்தார். அது தங்கள் மகள் என இருவரும் தெரிந்து கொண்டவுடன், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவசர உதவிக்கான 911 எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் தொடர்பு கிடைக்காமல் தவித்தனர்.

    பிறகு அருகில் இருந்தவர்களின் படகில் அச்சிறுமியை ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.

    ஏரிக்கரையில் இருந்த அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக அவசர உதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அச்சிறுமியை கொண்டு சென்றனர்.

    அச்சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறியிருப்பதாவது:-

    இது விபத்துதான். இருந்தாலும் நாங்கள் விசாரித்து வருகிறோம். படகில் இருந்த 12 பேரும் உயிர் காக்கும் மேல்சட்டைகளை அணிந்திருந்தனர். யாரும் மது அருந்தியிருக்கவில்லை.

    இவ்வாறு காவல்துறை தெரிவித்தது.

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கர்ப்பிணி டிரைவரை, பயணி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #arizona #pregnantladydead
    போனிக்ஸ்:

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரில் உள்ள லிப்ட்  நிறுவனத்தில்  கார் ஓட்டுனராக கிறிஸ்டியானா ஹொவாடோ (39) என்ற பெண் வேலை பார்த்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கருவுற்றிருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பயணியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

    டெம்ப் பகுதியில் சென்றபோது காருக்குள் இருந்த பயணி, கிறிஸ்டியானா ஹொவாடோ கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. பின்னர் ஹொவாடொவின் காரையும் எடுத்துச் சென்றுள்ளார்.

    இதுதொடர்பாக டெம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேபியன் டுராசோ என்ற 20 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

    இதுபற்றி டெம்ப் காவல்நிலைய செய்தித் தொடர்பாளர் ரொனால்டு எல்காக் கூறுகையில், "இதுபோன்ற மனதை பாதித்த பல சம்பவங்களை போலீஸ் அதிகாரிகள் சந்தித்துள்ளனர். இந்த சம்பவமும் அதேபோல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என கூறினார்.

    இதனையடுத்து லிப்ட் நிறுவனத்தை உடனடியாக  தொடர்புகொள்ள முடியாத நிலையில், நேற்று வாஷிங்டனில் இருந்து தொடர்பு கொண்ட போது, 'இந்த சம்பவம் தெரிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். உயிரிழந்த ஹொவாடோவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நினைத்து மிகவும் வருந்துகிறோம். லிப்ட் நிறுவனத்தின் ஊழியர்களின் பாதுகாப்பே எங்கள் முக்கிய நோக்கமாகும். அந்த நபரின் கணக்கை நீக்கிவிட்டோம். மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு  முழு ஒத்துழைப்பு அளிப்போம்' என கூறினர்.

    இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘காரில் டுசாரோவை ஏற்றி ஹொவாடோ செல்லும் போது,  வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தும் கத்தியினால் சரமாரியாக தாக்கியுள்ளான். பின்னர் காரிலிருந்து ஹொவாடோ கீழே விழுந்த நிலையில் , டுசாரோ காரை திருடிச் சென்றுள்ளான். கீழே விழுந்த ஹொவாடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும், கருவில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்’ என்று தெரிவித்தனர். #arizona #pregnantladydead

    இந்நிலையில் கர்ப்பிணி டிரைவரை கொலை செய்த டுசாரோ கலிபோர்னியாவை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
    வாகன கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #arizona #pregnantladydead
    புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது.

    அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் பரபரப்பாக போலீஸ் நிலையம் வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் செய்தார்.

    அதை உண்மை என நம்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

    அப்போது அவர் தனது குழந்தையை குளியல் தொட்டியில் தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் குழந்தை ரெய்னரின் உடலை ஒரு பெரிய ‘பேக்’கில் அடைத்து அதை அருகில் உள்ள பூங்காவில் வீசியதாக கூறினார்.

    எனவே, ஜென்னாவை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலும் மீட்கப்பட்டது.

    பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்றது ஏன் என ஜென்னா போலீசில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அதில், புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது குழந்தை ரெய்னர் இடைவிடாது தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜென்னா குழந்தையை குளியல் தொட்டியில் நிரம்பி இருந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார்.
    ×