search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு நாட்டிலேயே முதலிடம்
    X
    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு நாட்டிலேயே முதலிடம்

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு நாட்டிலேயே முதலிடம்

    பிற நாடுகளில் உள்ள நகரங்களை ஒப்பிடுகையில் பெங்களூருவில் கொரோனா தடுப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் சிறப்பாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
    பெங்களூரு :

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது, அதனை எதிர்கொள்வது, உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்ததில் நாட்டிலேயே மற்ற நகரங்களை காட்டிலும் பெங்களூரு முன்மாதிரியாக செயல்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற நகரங்களை விட குறைவாக இருப்பதுடன், பலி எண்ணிக்கையும் குறைந்த அளவே இருக்கிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பெங்களூருவுக்கு முதலிடத்தை மத்திய அரசு அளித்துள்ளது. அத்துடன் இந்தியா தவிர பிற நாடுகளில் உள்ள நகரங்களை ஒப்பிடுகையிலும் பெங்களூருவில் கொரோனா தடுப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் சிறப்பாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

    எடியூரப்பா

    இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில், “நாட்டிலேயே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூருவுக்கு மத்திய அரசு முதலிடம் அளித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெங்களூருவில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெங்களூரு நகரில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இது தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும். பெங்களூருவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது இந்த சிறப்பான பணி தொடர வேண்டும்,“ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×