search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
    X
    சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

    சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியை ராஜ்யசபை எம்பியாக்குவதா? - தேசியவாத காங்கிரஸ் கண்டனம்

    சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை ராஜ்யசபை எம்.பியாக்குவதா? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ரஞ்சன் கோகாய். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அயோத்தி வழக்கு, ரபேல் ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற ராஜ்யசபை நியமன எம்.பியாக ரஞ்சன் கோகாயை அறிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ராஜ்யசபை உறுப்பினராக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை ராஜ்யசபை எம்.பியாக்குவதா? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை ராஜ்யசபை எம்.பி பதவிக்கு பரிந்துரை செய்திருக்கக் கூடாது.  

    இது நமது அரசியலமைப்பின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த அம்சமாகும். முக்கியமான வழக்குகளை கையாண்ட நீதிபதியை ராஜ்யசபை எம்.பி.யாக நியமனம் செய்வதை தவிர்த்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×