search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்
    X
    இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்

    சிஏஏ குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததற்கு மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது  இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி, சென்னை என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக பெரும் வன்முறை  நடந்து வந்தது. தற்போது தான் படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பி உள்ளது.

    இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

    இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபணையை தெரிவித்துள்ளது, குடியுரிமை திருத்த சட்டம்  இந்தியாவின் உள் விஷயம் என்றும், சட்டங்களை உருவாக்குவதற்கான இந்திய பாராளுமன்றத்தின் இறையாண்மை உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறி உள்ளது.

    ஜெனீவாவில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் நிரந்தர தூதர் இந்தியாவின் முடிவு குறித்து தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-

    ஜெனீவாவில் உள்ள எங்கள் நிரந்தர தூதர் நேற்று மாலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மைக்கேல் பேச்லெட்டிடம்  2019 குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    இந்தியாவின் இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளில் யாரும் தலையிட எவ்விதமான உரிமையும் இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

    இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும். அதன் அரசியலமைப்பு மதிப்புகளின் அனைத்து தேவைகளுக்கும் இணங்குகிறது என்பதில்  இந்தியா தெளிவாக உள்ளது.

    இந்தியா சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடு. எங்கள் சுயாதீன நீதித்துறை மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை மற்றும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களின் குரல் மற்றும் சட்டபூர்வமான நிலையான நிலைப்பாடு சுப்ரீம் கோர்ட்டால்  நிரூபிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததற்கு மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×