search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ ஆய்வு - கோப்புப்படம்
    X
    மருத்துவ ஆய்வு - கோப்புப்படம்

    கொரோனா வைரஸ் இத்தனை லட்சம் உயிர்களை பலிவாங்கியதா?

    சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல லட்சம் என கூறப்படுகிறது.



    கொரோனா வைரஸ் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான போலி தகவல்களின் எண்ணிக்கையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    அவ்வாறு ஃபேஸ்புக்கில் பரவும் தகவல் ஒன்றில் இதுவரை கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் சுமார் 28 லட்சம் பேரை பாதித்து இருப்பதாகவும் சுமார் 1,12,000 பேர் கொரோனா வைரஸ் மூலம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    மேலும் கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் உடல்கள் நேரடியாக இடுகாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை நம்பவைக்கும் விதமாக செய்தி தொகுப்பு ஒன்றின் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

    எனினும், ஆய்வில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களை சீன வட்டாரங்கள் தெரிவித்ததாக பதிவிடப்பட்டு இருந்த நிலையில், அவை முற்றிலும் பொய் என்பது தெளிவாகிவிட்டது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் கொரோனா வைரஸ் மூலம் 563 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், சுமார் 30,000 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று கொரோனா வைரஸ் மூலம் 1,12,000 பேர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×