search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
    X
    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

    ஹைட்ரோ கார்பன் திட்டம் மறு பரிசீலனை இல்லை- பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

    ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது இல்லை என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் துறையின் அனுமதியையும், மக்களின் கருத்துகளையும் பெற வேண்டியது அவசியமாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பை அறிவித்தது. அதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. மக்களின் கருத்துகளும் பெற தேவையில்லை என கூறி இருந்தது.

    இதற்கு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்துக்கு கடிதம் வாயிலாக கொண்டு சென்றார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்தை அறியத்தேவையில்லை என்ற முடிவை கைவிட வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

    ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது இல்லை என்ற எங்கள் கொள்கை முடிவு வெளிப்படையானது. இதில் மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். இறக்குமதி வெங்காயத்தை மக்கள் விரும்பாததால் வெங்காயம் விலை வேகமாக குறையவில்லை. ஆனால் விரைவில் குறைந்துவிடும்‘ என்றார்.

    Next Story
    ×