search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் ஓம் பிர்லா
    X
    சபாநாயகர் ஓம் பிர்லா

    2022-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டம்: சபாநாயகர் தகவல்

    பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடம் 2 ஆண்டுகளில் முடிவு பெற்று 2022-ம் ஆண்டு பாராளுமன்ற கூட்டம் அந்த கட்டிடத்தில் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய நாட்டின் முக்கிய அடையாளமாக டெல்லி பாராளுமன்ற கட்டிடம் திகழ்ந்து வருகிறது.

    இந்த கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில் கட்சி மற்றும் எம்.பி.க்கள் அலுவலகம், பாராளுமன்ற அலுவலகம் போன்றவற்றுக்கு இடம் போதவில்லை.

    எனவே, புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கட்டிட பணியை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கனடாவில் உள்ள ஒட்டாவாவில் காமன்வெல்த் சபாநாயகர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சபாநாயகர் ஓம்பிர்லா, பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகளில் முடிவு பெற்று 2022-ம் ஆண்டு பாராளுமன்ற கூட்டம் அந்த கட்டிடத்தில் நடைபெறும் என்று கூறினார்.

    பாராளுமன்றம்

    மேலும் 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியும் 2022-ம் ஆண்டு அந்த கட்டிடத்தில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    புதிய கட்டிடம் விசாலமான இடவசதியுடன் இருக்கும். அடுத்த 250 ஆண்டுகளுக்கு தாங்கும் திறன் கொண்டதாக இது கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×