search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    எதிர்க்கட்சி பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்: சிவசேனா

    எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாரதீய ஜனதாவினர் இந்த அரசாங்கம் செயல்பட அனுமதித்து பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா கூறி உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைந்து உள்ளது. இந்த புதிய அரசை சிவசேனாவின் பழைய கூட்டாளியும், தற்போதைய எதிர்க்கட்சியுமான பாரதீய ஜனதா கடுமையாக விமர்சித்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் நடந்த புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவையும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் புறகணித்தனர். இதை சிவசேனா விமர்சித்து உள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதை தேவேந்திர பட்னாவிஸ் தவிர்த்தது துரதிருஷ்டவசமானது. நாக்பூரில் நடந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் கூட, எதிர்க்கட்சிகள் குழப்பத்தை உருவாக்கி வெளிநடப்பு செய்தன.

    தற்போது மகாராஷ்டிராவில் ஒரு முழுமையான அரசாங்கம் அமைந்து உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக நாடு அமைதியின்மையை எதிர்கொண்டது. அந்த நேரத்திலும் 6 பேரை மட்டுமே மந்திரிகளாக கொண்டிருந்த மகாராஷ்டிரா அரசு மாநிலத்தை அமைதியாக வைத்திருந்தது.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாரதீய ஜனதாவினர் தேவையில்லாமல் ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே இந்த அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை தாங்களே கேலி செய்து கொள்கிறார்கள் என்பதே மக்களின் பார்வையாக உள்ளது.

    எனவே எதிர்க்கட்சி இந்த அரசாங்கம் செயல்பட அனுமதித்து பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×