search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேரணி - 3வது நாளாக மம்தா பங்கேற்பு

    கொல்கத்தாவில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி 3-வது நாளாக பேரணி நடத்தினார்.
    கொல்கத்தா:

    குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

    இதற்கிடையே, கொல்கத்தாவில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நேற்று முன்தினம் பேரணி நடத்தினார். நேற்று இரண்டாவது நாளாகவும்  மம்தா பேரணி நடத்தினார்.

    இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கொல்கத்தா நகரம் முழுவதும் ஸ்தம்பித்தது.

    இன்று 3-வது முறையாக ஹவுரா மைதானத்தில் இருந்து கொல்கத்தா கடற்கரை வரை பேரணி சென்றார். அப்போது அவர் பேசுகையில்,
    நீங்கள் (அமித் ஷா) ஒரு பாஜக தலைவர் மட்டுமல்ல, நாட்டின் உள்துறை அமைச்சரும் கூட. தயவுசெய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டவும். நீங்கள் தேசிய குடியுரிமை பதிவு, குடியுரிமை சட்டத்திருத்தம் ஆகியவற்றை  திரும்பப் பெறுங்கள், இல்லையெனில் நீங்கள் அதை எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள் என்பதை இங்கே பார்ப்போம் என தெரிவித்தார்.
    Next Story
    ×