search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா விமானம்
    X
    ஏர் இந்தியா விமானம்

    பெட்ரோல் விலை உயர்வால் ஏர் இந்தியாவுக்கு ரூ.4,685 கோடி இழப்பு - மத்திய மந்திரி தகவல்

    பெட்ரோல் விலை உயர்வால் ஏர் இந்தியாவுக்கு ரூ.4,685 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மக்களவையில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

    பெட்ரோல் விலை உயர்வால் விமான எரிபொருளுக்கான செலவு 2017-18-ம் ஆண்டில் ரூ.7,363 கோடியாக இருந்தது 2018-19-ல் ரூ.10,034 கோடியாக உயர்ந்துள்ளது. இது 28.9 சதவீதம் அதிகம். டாலர் உள்ளிட்ட அந்நிய செலாவணியின் மதிப்பும் ரூ.31 கோடியில் இருந்து ரூ.772 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த 2 முக்கிய காரணங்களால் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு இந்த ஆண்டில் ரூ.4,685 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×