search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
    X
    தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

    ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ. 30 முதல் டிச. 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் - சுனில் அரோரா

    ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் நாட்டிலேயே முதல் முறையாக வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு முறையில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

    முதல் மந்திரி ரகுபர் தாஸ் ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் முதல்கட்ட யாத்திரையை நடத்தி முடித்துவிட்டார். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையும் தொடங்கி உள்ளார். ஜார்க்கண்டில்  பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 
    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதுதொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
    நவம்பர் 30, டிசம்பர் 7, 12,16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது.  

    பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 23ம் தேதி நடைபெறும். இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

    நாட்டிலேயே முதல் முறையாக இந்த தேர்தலில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு முறையில் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கலாம் என தெரிவித்தார்.
    Next Story
    ×