search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வல்லபாய் படேல் சிலை
    X
    வல்லபாய் படேல் சிலை

    சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு நாளை அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி, நாளை குஜராத் சென்று ஒற்றுமை சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    2014ம் ஆண்டு முதல் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இதற்கிடையே, வல்லபாய் படேலின் பிறந்த தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 

    பிரதமர் மோடி

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத்துக்கு செல்கிறார். அங்கு சரோவர் அணையில் அமைக்கப்பட்டு உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

    அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டியது குறித்து விளக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×