search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங்
    X
    முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங்

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

    இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத் தளபதிகள் டெல்லியில் இன்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஷ்மீரை கைப்பற்றுவதற்காக 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு 27-10-1947 அன்று காஷ்மீருக்கு நுழைந்தது.

    லடாக் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி

    அந்த நாளை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி ‘இன்பான்ட்டரி டே’ என்று நமது ராணுவ வீரர்களால் நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது.

    அவ்வகையில் அக்டோபர் 27-ம் தேதியான நேற்று 73-வது ‘இன்பான்ட்டரி டே’ கடைபிடிக்கப்பட்டது.

    முப்படைகளை சேர்ந்த தளபதிகள் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் நாடெங்கிலும் உள்ள ராணுவ வீரர்கள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதுரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் டெல்லியில் இன்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    Next Story
    ×