search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    மராட்டியம், அரியானாவில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும்- கருத்து கணிப்பில் தகவல்

    மராட்டியம் மற்றும் அரியானாவில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று கருத்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மராட்டியம், அரியானா மாநிலங்களில் நாளை மறுநாள் (21-ந்தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    இரு மாநிலங்களிலுமே தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மராட்டியத்தில் இம்முறை சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தும், அரியானாவில் தனித்தும் பா.ஜனதா போட்டியிடுகிறது.

    இந்நிலையில் ஏ.பி.சி. நியூஸ், சி-வோட்டர் கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 76 இடங்கள் வரை கிடைக்கலாம். பிற கட்சிகளுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

    90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதா 82 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரசுக்கு 3 இடங்களும், பிற கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைக்கும்.

    ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பிலும் இரு மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி தொடரும் என கூறி உள்ளது. மராட்டியத்தில் பா.ஜனதாவுக்கு 142 முதல் 147 இடங்களும், சிவசேனாவுக்கு 83 முதல் 85 இடங்களும் கிடைக்கும்.

    காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 48 முதல் 52 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் பா.ஜனதாவுக்கு 58 முதல் 70 இடங்களும், காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 5 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.

    அரியானாவில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 47 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
    Next Story
    ×