search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில் - புதிய சட்டத்தில் முதல் தண்டனை

    ஐதராபாத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு புதிய சட்டத்தின்படி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பபட்டது.
    ஐதராபாத்:

    12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதற்காக போக்சோ என்ற சட்டம் ஏற்கனவே உள்ளது.

    ஆனாலும், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் வற்புறுத்தப்பட்டது.

    இதையடுத்து இந்த சட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

    குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கலாம் என சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

    இந்த சட்டப்படி தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் ஷாஅலிபண்டா பகுதியை சேர்ந்த 4½ வயது சிறுமியை ஜெகன் (வயது 62) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை மெட்ரோபாலிட்டன் நீதிபதி சுனிதா குஞ்சாலா விசாரித்தார்.

    ஜெகனுக்கு புதிய சட்டத்தின்படி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படுவதாக அவர் தீர்ப்பு கூறினார்.
    Next Story
    ×