என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப் அறிக்கை
Byமாலை மலர்16 Oct 2019 6:19 PM GMT (Updated: 16 Oct 2019 6:19 PM GMT)
இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழந்துள்ளன என யுனிசெப் அறிக்கை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:
ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்ட சத்து பற்றாக்குறைக்கு இலக்காகிறார்கள். 42 சதவீத குழந்தைகளே (6 முதல் 23 மாதங்கள் வரையிலான வயது) போதிய அளவில் உணவை பெறுகிறார்கள். 21 சதவீத அளவிலான குழந்தைகளே போதிய பல்வேறு வகையான உணவை பெறுகின்றனர்.
இந்திய பெண்களின் சுகாதாரத்தில், ஒவ்வொரு 2வது பெண்ணும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளார். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பரவலாக ரத்த சோகை காணப்படுகிறது. சிறுவர்களை விட சிறுமிகளில் நோய் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.
5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது. ஒவ்வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் ஊட்ட சத்து காரணிகளை ஊக்குவிப்பதில் போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்ட சத்து திட்டம் பெருமளவிலான பங்கு வகிக்கிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.
ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்ட சத்து பற்றாக்குறைக்கு இலக்காகிறார்கள். 42 சதவீத குழந்தைகளே (6 முதல் 23 மாதங்கள் வரையிலான வயது) போதிய அளவில் உணவை பெறுகிறார்கள். 21 சதவீத அளவிலான குழந்தைகளே போதிய பல்வேறு வகையான உணவை பெறுகின்றனர்.
5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது. ஒவ்வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் ஊட்ட சத்து காரணிகளை ஊக்குவிப்பதில் போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்ட சத்து திட்டம் பெருமளவிலான பங்கு வகிக்கிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.
Next Story
×