search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம் தான் முதன்மையான மொழி- எடியூரப்பா

    கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம் தான் முதன்மையான மொழி. கன்னடத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கருத்துகளை வெளியிட்டனர்.

    ஆனால் இந்த விஷயத்தில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார். எடியூரப்பா நேற்று தனது டுவிட்டரில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நமது நாட்டில் அதிகாரப்பூர்வமாக உள்ள அனைத்து மொழிகளும் சமமானவை. கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம் தான் முதன்மையான மொழி. கன்னடத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். கன்னடத்தையும், கலாசாரத்தையும் மேம்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×