search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்
    X
    கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

    இந்தியை வலுப்படுத்தினால்தான் நாட்டின் ஒற்றுமை ஓங்கும் - கேரள கவர்னர் கருத்து

    நாட்டின் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்றால் இந்தியை வலுப்படுத்துவது அவசியம் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறி உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    மத்திய மந்திரி அமித்ஷா நாட்டின் தேசிய மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் இதுபற்றி கூறும்போது, நாட்டின் நிலவும் பிரச்சினையை திசை திருப்புவதற்காக அமித்ஷா மொழி தொடர்பான இந்த கருத்தை கூறியிருக்கிறார்.

    சங்பரிவார் அமைப்புகளின் திட்டத்தை அவர் முன்னிலைப்படுத்துகிறார். இதனால் நாட்டுக்கு ஆபத்தை உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

    அமித்ஷா

    அதே நேரத்தில் கேரள கவர்னர் ஆரிப்முகமது கான் அமித்ஷாவின் கருத்தை வரவேற்றுள்ளார். அவர் இதுபற்றி கூறும்போது, இந்த நாட்டின் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்றால் இந்தியை வலுப்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் கூறும்போது, நாட்டில் ஒரே வரி இருக்கலாம். ஒரே தேர்தல் இருக்கலாம். ஆனால் ஒரே மொழி தான் இருக்க வேண்டும், ஒரே கலாசாரம் தான் இருக்க வேண்டும் என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை. அதுபோன்ற முயற்சி இந்தியாவின் ஒற்றுமையை நாசமாக்கிவிடும் என்று கூறியுள்ளார்.

    கர்நாடகாவை சேர்ந்த பா.ஜனதா சட்ட மந்திரி மதுசாமி இதுபற்றி கூறும்போது, அமித்ஷா பேச்சில் இந்தி திணிப்பு இருப்பதாக நான் கருதவில்லை.

    அதே நேரத்தில் இந்தியை திணித்தால் நாங்கள் ஒதுபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். கன்னட மொழிக்கு எந்த வகையில் ஆபத்து வந்தாலும் கன்னடர்களாகிய நாங்கள் அதை கடுமையாக எதிர்ப்போம் என்று கூறினார்.
    Next Story
    ×