search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலை
    X
    பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலை

    பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல்

    பஞ்சாபின் குருதாஸ்பூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள படாலா பகுதியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் ஊழியர்கள் இன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

    காயமடைந்தவர்களை மீட்கும் பணி

    தகவலறிந்து 10க்கு மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×