search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    தொழில் முனைவோர்கள் அச்சம் இல்லாமல் தங்களது தொழிலை தொடர வேண்டும் - நிர்மலா சீதாராமன்

    தொழில் முனைவோர்கள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் தங்களது தொழிலை தொடர வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    புனே:

    மராட்டிய மாநிலம் புனேவில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    இந்த நாட்டில் சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழில் முனைவோர்கள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் தங்களது தொழிலை தொடர வேண்டும் என்பதே எங்களது இலக்கு. ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் மூலமாக தீர்வு காணப்படும்.  

    வெள்ளம் பாதித்த மாநிலங்களில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரி வசூல் இலக்கை எட்டுவதற்கான இறுதித் தேதி கலந்து பேசியே முடிவு செய்யப்பட்டது.

    ராகுல் காந்தி
    ராகுல்காந்தி "சோர், சோரி" என குரல் எழுப்பும் போதெல்லாம் ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது.  அவர் "சோர், சோரி" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று விட்டார். ஏற்கனவே தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டனர் என்று கூறினார். அதே சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அதன் பயன் என்ன? என கேள்வி எழுப்பினார்.

    ரிசர்வ் வங்கியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது என நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
    Next Story
    ×