search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவதா? -ராகுல் கண்டனம்

    ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பெறுவதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை மற்றும் உபரி இருப்புத் தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு, ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தது.

    இதை ரிசர்வ் வங்கி வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. உபரி நிதியில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ரிசர்வ் வங்கி

    “பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அவர்கள் உருவாக்கிய பொருளதார பேரழிவை எப்படி சரிசெய்வது என்பது தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது. இது மருந்தகத்தில் பிளாஸ்டர் திருடி குண்டு காயத்திற்கு ஒட்டுவது போன்றதாகும்” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
    Next Story
    ×