search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளின்குமார்
    X
    நளின்குமார்

    கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்

    கர்நாடகா மாநிலத்தின் பாஜக தலைவராக நளின்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர் எடியூரப்பா.

    காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

    இதையடுத்து, பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரது அழைப்பை ஏற்று முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக நளின்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
    Next Story
    ×