என் மலர்

  செய்திகள்

  விபத்துகுள்ளான லாரி
  X
  விபத்துகுள்ளான லாரி

  புனே தேசிய நெடுஞ்சாலையில் கார்-லாரி பயங்கர மோதல்: 9 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
  புனே:

  மகாராஷ்ர மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர். கார் கடம்வாக் வஸ்தி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஏதிரே வந்த லாரி மீது  நேருக்கு நேர் மோதியது.

  இந்த கோரவிபத்தில் காரில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த நபரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

  விபத்துகுள்ளான கார்


  தகவல் அறிந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிவேகமாக காரில் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் 19 முதல் 23 வயதுக்குற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×