search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா மழை
    X
    கேரளா மழை

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை 43 சதவீதம் குறைந்தது

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இடுக்கியில் இயல்பை காட்டிலும் 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 8-ந்தேதி தொடங்கியது. முதலில் தீவிரம் காட்டிய மழை அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் வாயு புயல் உருவானதால் தென்மேற்கு பருவமழை பெய்வதில் அது பாதிப்பை உண்டாக்கியது.

    இது போன்ற காரணங்களால் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று (10-ந்தேதி) வரை பெய்த தென்மேற்கு பருவமழையை வைத்து பார்க்கும்போது இது சராசரியை விட 43 சதவீதம் குறைவான மழைப்பொழிவு என்பது தெரிய வந்துள்ளது.

    வழக்கமாக இந்த கால கட்டத்தில் 890.9 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 510.2 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது.

    மழை

    கேரள மாநிலத்திலேயே மிகவும் குறைவாக மழை பெய்துள்ள இடம் இடுக்கியாகும். இங்கு 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் சராசரியாக 394.5 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இதுவரை 302.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.

    இது இயல்பை காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும். அதே போல வயநாடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதம் மழை குறைந்துள்ளது.

    Next Story
    ×