search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திகார் சிறையில் உள்ள அரியானா முன்னாள் முதல் மந்திரி அறையில் இருந்து செல்போன் பறிமுதல்
    X

    திகார் சிறையில் உள்ள அரியானா முன்னாள் முதல் மந்திரி அறையில் இருந்து செல்போன் பறிமுதல்

    ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரியானா முன்னாள் முதல்வரின் அறையிலிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    டெல்லி:

    அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவரது ஆட்சின் போது ஆசிரியர் பணிக்கான சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிகப்பட்டு திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அரியானா முன்னாள் முதல்வர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறைக்குள் சிறை அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது சவுதாலா இருந்த  அறையிலிருந்து ஒரு செல்போன், அதற்கான சார்சர் கருவி மேலும் சில புகையிலை பொருட்களும் கைப்பற்றபட்டது. சிறை அதிகாரிகள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள ரமேஷ் என்பவர் தெரிவித்தார். இதனைதொடர்ந்து கைப்பற்றப்பட்ட செல்போன் டெல்லி காவல் சிறப்பு புலனாய்வு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதிலிருந்து செய்யப்பட்ட அழைப்புகள் குறித்து தீவிர விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சிறைத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிகப்பட்டுள்ள அரியானா முன்னாள் முதல்வர்  ஓம் பிரகாஷ் 21 நாட்கள் பரோலில் சென்று கடந்த 12-ம் தேதி மீண்டும் சிறை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.    
    Next Story
    ×