என் மலர்

  செய்திகள்

  மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மர்ம மரணம்
  X

  மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மர்ம மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு பா.ஜ.க. கடும் சவாலாக திகழ்கிறது. எதிர்பாராத வகையில் இங்கு கணிசமான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது.

  தேர்தலுக்கு பிறகு திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த மோதலில் 2 கட்சிகளையும் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

  இந்நிலையில். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் தூக்கில் பிணமாக தொங்கினர். ஹவுரா மாவட்டத்தில் உள்ள கர்போடா கிராமத்தை சேர்ந்தவர் சமாதுல் போலி. பா.ஜ.க.வின் தீவிர தொண்டரான இவர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பூத் தலைவராக இருந்தார். இவர் கர்போடா கிராமத்தில் வயலில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

  திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக ஜெய்ஸ்ரீராம் பேரணி நடத்தியபோது இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தேர்தலுக்கு பிறகு இவரது வீடு திரிணாமூல் காங்கிரசாரால் அடித்து நொறுக்கப்பட்டது.

  நேற்று முன்தினம் மதியம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஸ்வதேஷ் மன்னா, அட்சதா என்ற கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் பிணமாக தொங்கினார். இவரும் தனது கிராமப்பகுதியில் ஜெய்ஸ்ரீராம் பேரணி நடத்தினார்.

  இவர்கள் இருவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டதாக பா.ஜ.க.வின் ஹவுரா கிராமத் தலைவர் அனுபம் முல்லிக் குற்றம் சாட்டியுள்ளார்.

  இதேபோல், கடந்த 2018-ல் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின் போது பா.ஜ.க. தொண்டர்கள் புருவியா கிராமத்தில் கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

  ஆனால், இதை திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. புலாக்ராஸ் மறுத்துள்ளார். பா.ஜ.க. எங்கள் கட்சி தொண்டர்களை இதில் சிக்க வைக்கப் பார்க்கிறது என்றார்.

  இத்தகைய சூழ்நிலையில் மேற்கு வங்காள கவர்னர் கே.என். திரிபாதி டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தார்.

  மேற்கு வங்காளத்தில் கவர்னர் ஆட்சி நடைமுறைபடுத்தப்படுமா? என அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், அதுகுறித்து எதுவும் விவாதிக்கவில்லை. அதே நேரத்தில் பேச்சு விவரங்கள் எதையும் வெளியிட முடியாது என்றார்.
  Next Story
  ×