search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட சதி - வகேலா காட்டம்
    X

    புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட சதி - வகேலா காட்டம்

    குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சங்கர்சிங் வகேலா, புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட சதி என கூறியுள்ளார். #sankersinhvaghela #PulwamaAttack
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் முடிவடைந்தது. இந்நிலையில் குஜராத்தின் முன்னாள்  முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சங்கர்சிங் வகேலா நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில்  நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு இருந்த கார், குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டது. பயங்கரவாதம், பாஜகவினரால் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எத்தனையோ பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பாலகோட்டில் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒருவர் கூட பலியாகவில்லை. சர்வதேச நிறுவனங்களில் ஒன்று கூட 200 பயங்கரவாதிகள் பலியானது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. ஆகையால் பாலகோட் தாக்குதலும் திட்டமிட்ட சதி தான் என தெரிகிறது.



    உளவுத்துறை புல்வாமாவில் நடக்கவிருக்கும் தாக்குதல் குறித்து  முன்னதாக கூறியபோது, எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பாலகோட்டில் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்கள் குறித்து தகவல் தெரிந்திருக்கும்போது முன்கூட்டியே அதனை அழிக்காதது ஏன்? புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்காக காத்திருந்தது எதற்கு?

    ஏனென்றால் அத்தனைக்கும் பின் பாஜக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதல் பாஜகவின் மிகப்பெரிய திட்டமிட்ட சதியாகும். மேலும் குஜராத்தில் பாஜகவின் ஆட்சி தோல்வியை தழுவியது. இப்போது குஜராத் தத்தளித்து வருகிறது. சில பாஜக தலைவர்கள் கூட அதிருப்தியில் தான் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #sankersinhvaghela #PulwamaAttack   
    Next Story
    ×