search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புல்வாமா தாக்குதல்"

    • விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
    • 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?

    விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்

    மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • என்.சி.சி.மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தாக்குதல் நடந்தது

    நாகர்கோவில்:

    ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் லெத்போராவில் கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 40 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி இந்தியாவின் கருப்பு தின மாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் பிப்ரவரி 14-ந்தேதி யான இன்று நாடு முழுவதும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதேபோல் குமரி மாவட்ட ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    அந்த வகையில் கன்னியாகுமரி, மாதவபுரம், குளச்சல், திங்கள்சந்தை, திக்கணங்கோடு, தக்கலை மற்றும் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 150 ராணுவ வீரர்கள் பங்கேற்று பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.இதில் என்.சி.சி.மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வடசேரியில் இருந்து புத்தேரி வரை சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை ராணுவ வீரர்கள் நட்டு வைத்தனர்.

    பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தான் இன்று சுட்டு வீழ்த்தியதாக கூறும் இந்திய போர் விமானத்தில் இருந்து காயங்களுடன் உயிர் தப்பிய இந்திய வீரர் அபினந்தன் வர்தமானிடம் அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கையில் ஒரு குவளையில் உள்ள தேனீரை  பருகியவாறு அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிமான பதில்களை அவர் தவிர்க்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    நான் இந்திய விமானப்படையை சேர்ந்த ‘விங் கமாண்டர்’ அபினந்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

    எங்களுடன் இப்போது இருப்பதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்? என்று ஒரு அதிகாரி அபினந்தனை கேட்கிறார்.

    ‘நான் இது தொடர்பாக என்னுடைய கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டது முதல் இப்போதுவரை அவர்கள் என்னை நன்றாக நடத்தி வருகின்றனர். 

    என்னுடைய தாய்நாட்டுக்கு திரும்பிச் சென்ற பிறகும் இந்த கருத்தை நான் மாற்றி தெரிவிக்க மாட்டேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகவும் கண்ணியான (ஜென்ட்டில்மேன் மேன்) முறையில் என்னை நடத்தினார்கள். அவர்கள் ராணுவத்தினர் இந்தியாவிடம் பிடிபட்டாலும் இதேபோல் கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என அபினந்தன் பதிலளிக்கிறார்.

    இந்தியாவில் நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற கேள்விக்கு, ‘நான் இதை உங்களிடம் தெரிவிக்க கூடாது. என்றாலும், இந்தியாவின் தென்கோடி பகுதியை சேர்ந்தவன்’ என்கிறார்.  நீங்கள் திருமணமானவரா? என்னும் கேள்விக்கு ‘ஆம்’ என்கிறார். தேனீர் எப்படி உள்ளது? என்பதற்கு மிக அருமையாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

    ‘நீங்கள் எந்தவகை போர் விமானத்தில் பறந்து வந்தீர்கள்? என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளிப்பதை தவிர்க்கும் அபினந்தன், ‘மன்னிக்கவும் எரிந்து விழுந்த விமானத்தின் சிதிலங்களை கொண்டு நீங்களே யூகித்துக் கொள்ளலாம்’ என்று சாதுரியமாக கூறுகிறார்.

    போர் விமானத்தில் நீங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததற்கான முக்கிய நோக்கம் என்ன? என்னும் கடைசி கேள்விக்கு ‘மன்னிக்க வேண்டும். இதற்கு நான் உங்களுக்கு பதிலளிக்க இயலாது’ என துணிச்சலாக அபினந்தன் பதில் கூறும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation #IAFpilotAbhinandan #BringBackAbhinandan

    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

    பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது, பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். #PulwamaAttack #IndianCommunityProtest
    புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack
    ராஜமுந்திரி :

    கா‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.

    இந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும் இணைத்து காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதைப்போல புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றவில்லை என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் கூறியிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்‌ஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    நாட்டின் முதல் பிரதமரான நேருவே கா‌ஷ்மீர் பிரச்சினைக்கு காரணம். கா‌ஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் ஐதராபாத் விவகாரத்தை சர்தார் படேல் கவனித்ததால், அது இன்று நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவரே நாட்டின் முதல் பிரதமராகி இருந்தால், கா‌ஷ்மீர் பிரச்சினை இருந்திருக்காது.

    நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களுக்காகவும் பிரதமர் மோடி நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்து வருகிறார். ஆனால் அவரது நோக்கம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமரை நம்பும் நீங்கள், உங்கள் பிரதமரை நம்பவில்லை. மலிவான அரசியலில் ஈடுபடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

    புல்வாமா சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அதனால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது. ஏனெனில் ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடனும், உயிரிழந்த வீரர்களுடனும் இருக்கிறது.

    இவ்வாறு அமித்‌ஷா கூறினார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் இன்றிரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. பாலம் விமான நிலையத்தில் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #CRPFsoldier #PulwamaAttack #RahulGandhi #Rahullaywreath #CRPFjawans
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  

    பின்னர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர்.


    அங்கிருந்து 40 வீரர்களின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. வீரர்களின் உடல்களை சுமந்து வந்த விமானம் இன்றிரவு சுமார் 8 மணியளவில் டெல்லியில் ராணுவத்துக்கு சொந்தமான பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,  மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி தனோவா லே, கடற்படை தளபதி சுனில் லான்பா  உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  #CRPFsoldier #PulwamaAttack #RahulGandhi  #Rahullaywreath #CRPFjawans
    பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். #PulwamaAttack #RajnathSingh #PakistanISI
    ஸ்ரீநகர்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் ஜம்மு நகரை வந்தடைந்தார்.

    நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த வீரர்கள் ‘வீர் ஜவான் - அமர் ரஹே’ (உங்களது வீரமும் தியாகமும் அமரத்துவமாக வாழும்) என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

    இறுதி மரியாதைக்கு பிறகு ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர்.

    புல்வாமா தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், காஷ்மீர் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


    ’பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை மற்றும் அந்நாட்டின் பயங்கரவாதிகளுடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சில (பிரிவினைவாத) அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து பணம்பெற்று வருகிறார்கள்.

    அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சதிவேலைகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இவர்கள் திட்டமிட்டு தருகின்றனர். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர்.

    இவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்க்கமான போரில் இந்தியா வெற்றிபெற்றே தீரும்.

    பாதுகாப்பு நடவடிக்கையாக இனி சில நாட்களுக்கு மட்டும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் செல்லும் சாலைகளில் வேறெந்த தனியார் வாகனங்களும் இடையில் செல்ல முடியாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நமது வீரர்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையால் ஏற்படும் அசவுகரியத்துக்காக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்’ எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  #PulwamaAttack #RajnathSingh #PakistanISI      
    ×