search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two militants"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனந்த்நாக் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    #JKEncounter #MilitantsKilled
    ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #SoporeEncounter
    பாரமுல்லா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் அருகே உள்ள பிராத் கலன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினரும் போலீசாரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அதிகாலை வரை நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், லஷ்கர் இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஓவிஸ் பட், தாகிர் அகமது என்பது தெரியவந்தது.

    இந்த என்கவுண்டர் குறித்து வடக்கு காஷ்மீர் டிஐஜி அதுல் குமார் கோயல் கூறுகையில், “உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சரண் அடைவதற்கு வாய்ப்பு வழங்கியதையும் மீறி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே, நாங்கள் பதிலடி கொடுத்தோம். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார். #SoporeEncounter

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தளபதி உள்பட இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Militantskilled #Nowgamencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட சுத்து கொத்தைர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் ஒருவன் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சப்ஸார் அஹமது சோபி, இன்னொருவன் ஆசிப் அஹமது என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Militantskilled #Nowgamencounter 
    ×