என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட அபிநந்தன் பணியிட மாற்றம்
Byமாலை மலர்20 April 2019 7:22 PM IST (Updated: 20 April 2019 7:22 PM IST)
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வரத்மான் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #IAF #WingCommander #AbhinandantransferVarthaman #WingCommanderAbhinandan
புதுடெல்லி:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.
இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், அவரது பாதுகாப்பை முன்வைத்து ஸ்ரீநகரில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய விமானப்படை தளத்தில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #IAF #WingCommander #AbhinandantransferVarthaman #WingCommanderAbhinandan
Next Story
×