search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 பாராளுமன்ற தேர்தல் மோடிக்கும்-ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி- பிரியங்கா கருத்து
    X

    2019 பாராளுமன்ற தேர்தல் மோடிக்கும்-ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி- பிரியங்கா கருத்து

    2019 பாராளுமன்ற தேர்தல் பிரதமர் மோடிக்கும், எனது சகோதரர் ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். #priyanka #pmmodi #rahulgandhi #parliamentelection

    லக்னோ:

    காங்கிரசில் பிரியங்காவுக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரியங்காவும் நேரடியாக அரசியலில் குதித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் உத்தரபிரசேத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராகவும் பிரியங்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான பணிகளை தொடங்கும் வகையில் பிரியங்கா தற்போது உத்தர பிரதேசத்தில் முகாமிட்டுள்ளார்.

    நேற்று காலையில் இருந்து அவர் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அவருக்காக லக்னோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார்.

    தேர்தல் பணிகளை எவ்வாறெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் மூலம் பல்வேறு கருத்துக்களை அறிந்து கொண்டேன். அடிப்படை ரீதியாக தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது, என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்து பணிகளை தீவிரமாக்குவது என்பதை ஆலோசித்திருக்கிறோம்.

    நான் காங்கிரஸ் கட்சியின் மூலம் பல்வேறு வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். எவ்வாறு தேர்தல் வியூகங்களை வகுப்பது என்பதிலும், கட்சி அமைப்பை எவ்வாறு வழிநடத்துவது என்பதிலும் ஒரு தெளிவான நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்.


    2019 பாராளுமன்ற தேர்தல் என்பது எனக்கும் மோடிக்குமான போட்டி அல்ல. இது பிரதமர் மோடிக்கும், எனது சகோதரர் ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி. மோடியுடன் ராகுல் போரிட்டு வருகிறார்.

    அமலாக்க பிரிவினர் எனது கணவரின் தாயாருக்கு சம்மன் அனுப்பியது போன்ற விவகாரங்கள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும். ஆனாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரியங்காவுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக்ராஜ் என்பவர் கூறும்போது, பிரியங்காவின் ஆலோசனை எங்களை மிகவும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது. வித்தியாசமான தேர்தல் பிரசார திட்டங்களை வகுத்து இருக்கிறோம்.

    அவர் வருகை காங்கிரசுக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறினார்.  #priyanka #pmmodi #rahulgandhi #parliamentelection

    Next Story
    ×