search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்வது எதற்காக? - ராகுல் கேள்வி
    X

    சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்வது எதற்காக? - ராகுல் கேள்வி

    சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்வது எதற்காக என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி :

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனின் 3 நாள் பிரான்ஸ் பயணத்தை, ரபேல் போர் விமானம் வாங்குவதுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ’ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்புத்துறை மந்திரி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதற்கான காரணம் உண்மையில் மிகவும் எளிமையானது.

    பிரதமர்தான் இதில் முடிவெடுத்தார். எனவே கோர்ட்டு கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே பாதுகாப்புத்துறை மந்திரி இன்றிரவு(நேற்று இரவு) பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    நிர்மலா சீதாராமன் தனது பிரான்ஸ் பயணத்தின்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RafaleDeal #RahulGandhi
    Next Story
    ×