search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் கனமழை - தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என மோடி உறுதி
    X

    பஞ்சாப் கனமழை - தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என மோடி உறுதி

    பஞ்சாப்பில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிப்பு அடைந்தோருக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். #PunjabFloods #Modi
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல ஊர்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை கடந்து பாய்கிறது. இதையடுத்து, பஞ்சாப்பில் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.



    இதற்கிடையே, பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி அமரிந்தர் சிங் பார்வையிட்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் வீடு இழந்தோர் மற்றும் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிப்பு அடைந்தோருக்கு அரசு தேவையான நிவாரணங்களை அளிக்கும் என்றார்.

    இந்நிலையில், பஞ்சாப் முதல்மந்திரி அமரிந்தர் சிங்கிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது வெள்ளப் பெருக்கில் பாதிப்பு அடைந்துள்ள மக்களுக்கும் மாநிலத்துக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தார். #PunjabFloods #Modi
    Next Story
    ×