search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது - சீத்தாராம் யெச்சூரி
    X

    பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது - சீத்தாராம் யெச்சூரி

    பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury #BJP

    புவனேஸ்வரம்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், மதவாத சக்திகளின் அத்துமீறல் செயல்பாடுகள், சட்டப்பூர்வமான அமைப்புகள் மீது நடக்கும் தாக்குதல்கள் போன்றவற்றின் காரணமாக மத்திய அரசு மீது மக்களின் கோபம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை மிக அதிகரித்து இருக்கிறது. சுமார் 60 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா அரசு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை 1½ மடங்கு உயர்த்துவதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

    ரூ. 1 கோடியே 20 லட்சம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளும் குரல் கொடுத்த வருகிறார்கள். ஆனால், அரசு அதை செய்யவில்லை. அதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

    இப்போது நாட்டில் சில்லரை வர்த்தகத்தை சீரழிக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் பிலிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை கைப்பற்றி இருக்கிறது.

    இதன் மூலம் அன்னிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் இந்தியாவுக்குள் நுழைய பிரதமர் நரேந்திர மோடி வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.

    ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி, பண மதிப்பிழப்பு காரணமாக வர்த்தகங்கள், சிறு தொழில்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் பாதிப்பை அடைய செய்துள்ளனர்.

    இந்த அரசின் அபாயகரமான கொள்கைகளை எதிர்த்து போராடும் அமைப்புகளுக்கு பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் அனைத்தும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #SitaramYechury #BJP

    Next Story
    ×