search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட் தாக்கம் எதிரொலி: 2 வது நாளாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி - 840 புள்ளிகள் சரிவு
    X

    பட்ஜெட் தாக்கம் எதிரொலி: 2 வது நாளாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி - 840 புள்ளிகள் சரிவு

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை 840 புள்ளிகள் குறைந்தது. #unionbudget #sensex
    மும்பை:

    பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று காலை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நீண்ட கால முதலீடு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். நிதி மந்திரி அறிவிப்புக்கு பிறகு, மும்பை பங்குச்சந்தை இறக்கத்தை சந்தித்தது. காலையில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தை மாலையில் சரிவை சந்தித்தது.

    இந்நிலையில், இன்று காலை முதலே மும்பை பங்குச்சந்தை சரிய தொடங்கியது. காலையில் சுமார் 600 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின்னர் மாலையில் முடியும்போது 840 புள்ளிகள் சரிந்து 35,066 புள்ளிகளில் முடிவடைந்தது.

    இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் 190 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அது மாலை வரை தொடர்ந்தது. இதனால் வர்த்தகம் முடியும்போது, 256 புள்ளிகள் குறைந்து 10,760 புள்ளிகளில் முடிவடைந்தது.

    வங்கி துறை பங்குகள் சுமார் 3.80 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. மேலும், ஒ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, ஹீரோ மோடோகாப், கோல் இண்டியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. #unionbudget #sensex #tamilnews
    Next Story
    ×