search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா: விமானப்படை விமானம் விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி
    X

    தெலுங்கானா: விமானப்படை விமானம் விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி

    தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தின் பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தின் பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பு விமானமான ஐ.ஏ.எப் கிரண், இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில் இன்று வழக்கமான பயிற்சியில் ஐ.ஏ.எப் கிரண் விமானம் ஈடுபட்டு வந்தது.

    திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானமானது கீழே விழுந்தது. இதனையடுத்து, உடனியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் பயிற்சி பெண் விமானியை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×