என் மலர்

  செய்திகள்

  டெல்லியை தொடர்ந்து பதம்பார்க்கும் பனிப்புகை மூட்டம்: இன்று 6 ரெயில்கள் ரத்து
  X

  டெல்லியை தொடர்ந்து பதம்பார்க்கும் பனிப்புகை மூட்டம்: இன்று 6 ரெயில்கள் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுடெல்லியில் நிலவும் கடும் பனிப்புகை மூட்டம் காரணமாக இன்று 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 40 ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.
  புதுடெல்லி:

  புதுடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. அத்துடன் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றும் கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.

  எனவே, சாலைகளில் பனிப்போர்வை போர்த்தியது போன்று பனிப்புகை மூட்டம் காணப்படுவதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெயில் சேவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தினமும் பல்வேறு ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. சில வழித்தடங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றனர்.  இந்நிலையில், டெல்லியில் இன்றும்  கடும் பனிப்புகை மூட்டம் நிலவியது. இன்று காலை நிலவரப்படி 40 ரெயில்கள் தாமதமாக சென்றன. 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 13 ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  அதேசமயம், டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய தரவுகளின்படி டெல்லியின் மந்திர் மார்க் பகுதியில் காற்று மாசு அளவு 333 அக உள்ளது. துவாரகாவில் 332, சிறி போர்ட் பகுதியில் 288, பஞ்சாபி பாக் பகுதியில் 290 என்ற அளவில் உள்ளது. எனினும், அதிகரித்து வரும் மாசு அளவை குறைப்பது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×