என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டின் முதல் புல்லட் ரெயில்: என்னென்ன அம்சங்கள்?
Byமாலை மலர்14 Sep 2017 3:55 AM GMT (Updated: 14 Sep 2017 3:55 AM GMT)
இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் இன்று தொடங்கப்படும் நிலையில் இந்த ரெயிலில் உள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் அகமதாபாத் நகரில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்க இருக்கிறனர்.
இந்திய ரெயில்வே சேவையில் புதிய மைல் கல்லாக அமைய உள்ள இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மணிக்கு 200 கி.மீ வேகம் செல்லும் டால்கோ ரெயில்கள் சோதனையில் உள்ளன.
மும்பை - அகமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் புல்லட் ரெயில் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, மணிக்கு 320 கி.மீ வேகத்தில் புல்லட் ரெயில் பாய இருக்கிறது.
ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படும் இந்த திட்டமானது, 2022-23ம் ஆண்டில் முடிவடைந்து 2022-ம் ஆண்டு முதல் ரெயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நாளை ஒட்டி புல்லட் ரெயில் இயக்குவது எனவும், அதற்காக இந்த திட்டம் வேகமாக செயல்படுத்தப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு ஜப்பான் அரசு ரூ.88 ஆயிரம் கோடி நிதியை 0.1 சதவீத வட்டியில் கடனாக அளிக்கிறது. இந்த நிதி 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும்.
508 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் தண்டவாளத்திலும், 27 கி.மீ. தூரம் தரைவழி சுரங்கத்திலும், 7 கி.மீ. தூரம் கடல் வழி சுரங்கத்திலும், 13 கி.மீ. தரையிலும் புல்லட் ரெயில் ஓடும்.
மும்பை - அகமதாபாத் இடையே 12 ரெயில் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 70 முறை இந்த ரெயில் இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 750 பயணிகள் ஒரே நேரத்தில் புல்லட் ரெயிலில் பயணம் செய்ய முடியும். ஆனால், எவ்வளவு டிக்கெட் கட்டணமாக விதிக்கப்படும் என்ற தகவல் இது வரை இல்லை. விமான டிக்கெட்டை விட காஸ்ட்லியாக தான் புல்லட் ரெயில் டிக்கெட் கட்டணம் இருக்கும் என அறிவிக்கப்படாத தகவல்கள் இணையத்தில் சுற்றுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X