என் மலர்

  செய்திகள்

  கட்சியை புதுபிக்க உ.பி. முழுவதும் சூறாவளி பேரணி: மாயாவதி திட்டம்
  X

  கட்சியை புதுபிக்க உ.பி. முழுவதும் சூறாவளி பேரணி: மாயாவதி திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை புதுபிக்க உத்தரபிரதேசம் முழுவதும் சூறாவளி பேரணி மேற்கொள்ள மாயாவதி திட்டமிட்டுள்ளார்.
  லக்னோ:

  பாராளுமன்றத்தில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை பற்றி பேச நேரம் அளிக்கப்படுவதில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

  மாயாவதியின் இந்த அதிரடி அறிவிப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா மனுவும் மாநிலங்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மாயாவதி என்ன செய்யப் போகிறார் என்று கேள்விகள் எழுந்தது. பீகாரில் இருந்து மீண்டும் மாயாவதியை எம்.பி.யாக தேர்வு செய்ய தயாராக இருப்பதாக லாலு பிரசாத் அறிவித்து இருந்தார்.

  இந்நிலையில், மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியை புதுபிக்க உத்தரபிரதேசம் முழுவதும் சூறாவளி பேரணி மேற்கொள்ள மாயாவதி திட்டமிட்டுள்ளார்.

  வருகின்ற செப்டம்பர் 18-ம் தேதி மீரட் மற்றும் சகாரன்பூரில் இந்த பேரணி தொடங்குகிறது. மே 18-ம் தேதி வரை 9 மாபெரும் பேரணிகள் நடத்தப்பட உள்ளது.
  Next Story
  ×